மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்த பிரபல தமிழ் ஹீரோ!

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று முதல் டீ கடைகள், ஓட்டல்கள், மற்றும் அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற கடைகள் யாவும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இன்னும் சலூன்கள், முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள், ஸ்பா ஆகியவை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக முடி கொட்டாமல் இருக்கும் ஏராளமானோர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக் கொண்டும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி முடி வெட்டிக் கொண்டும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பொது மக்களைப் போலவே திரையுலக நட்சத்திரங்களும் தங்களுக்கு தாங்களே தலைமுடி வெட்டிக் கொண்ட புகைப்படங்களையும், தங்கள் மகன்களுக்கு முடி வெட்டிய புகைப்படங்களையும் அவ்வப்போது தங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.

அந்தவகையில் கோலிவுட் திரையுலகில் பிரபல ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி தனது மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்த காட்சி குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap