
விழுப்புரத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் இறந்த தனது தந்தையை அடக்கம் செய்யமுடியாமல் 16 மணிநேரமாக தவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஐயனார். இவருக்கு திருமணமாகி 11 வயதில் ஜீவா என்ற மகள் உள்ள நிலையில், பாலத்தின் மீது வேலை செய்து கொண்டிருக்கையில் கீழே தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது தாயாரும், மனைவியும் பார்த்து வந்த நிலையில் மகன் ஜீவா, மட்டும் தனது சித்தப்பா ஏழுமலையின் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஐயனாரை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று ஆனால் தவறாமல் நேர நேரத்திற்கு மருந்தும், சாப்பாடும் கட்டாயம் கொடுத்துவிட வேண்டும் என்று நிபந்தனையைக் கூறி மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
வீட்டிற்கு வந்த 30 நிமிடங்களில் மருத்துவமனையிலிருந்து மனைவிக்கு வந்த போன் காலில், ஐயனாரின் அம்மாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறி உடனே மருத்துவமனையில் சேர்வதற்கு கூறியுள்ளனர்.
ஆம் ஐயனாருடன் மருத்துவமனையில் இருக்கும் பொழுது தாயாருக்கும், மனைவிக்கும் கொரோனா பரிசோதனைக்கு ரத்தம் எடுத்துள்ளார்களாம்.
பின்பு இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், தந்தைக்கு என்ன மருந்து, சாப்பாடு எப்படி கொடுப்பது என்று மகன் திகைத்துள்ளார். மூக்கில் டியூப்புடன் இருந்த தந்தை 1 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஐயனார் உயிரிழந்தையடுத்து பொலிசார் அவரது உடலுக்கு அருகில் யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.
உயிர்பிரிந்து 11 மணி நேரமாகியும் உடலுக்கு அருகில் யாரையும் செல்லவிடாமல், சடலத்தினையும் அப்புறப்படுத்த விடாமல் பொலிசார் மக்களை தடுத்துள்ளனர்.
இதனை அவதானித்த ஐயனாரின் தம்பி ஏழுமலை, கதறி அழுதுள்ளது அங்கிருந்தவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்துள்ளது.