அதிரடியாக பணிகளை துவங்கிய பிரபல ஹீரோ படம் – வெளியான ஃபோட்டோ – அப்போ சீக்கிரமே ரெடி!

தமிழக அரசு (மே 11) சில பணிகளை மேற்கொள்ள ஊரடங்கில் தளர்வு அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன் படி திரைப்படங்களின் டப்பிங் பணிகள், ஒலிக் கலவை, விஎஃப்எக்ஸ், சிஜி, டிஐ (DI) உள்ளிட்ட பணிகளை அதிக பட்சம் 5 நபர்களைக் கண்டு மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதில் விஎஃப்எக்ஸ் பணிகள் மட்டும் 10 முதல் 15 பேர் பணி செய்யலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், ”சிபி சத்யராஜின் ‘கபடதாரி’ படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் மேற்கொள்வதில் மகிழ்ச்சி. முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஜேபி சார் டப்பிங் செய்கிறார். இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கபடதாரி படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இயக்குநர் ஜான் மகேந்திரன் இணைந்து திரைக்கதை அமைக்க, ‘சத்யா’ பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூசன் சார்பாக தனஞ்செயன் இந்த படத்தை தயாரி்ததுள்ளார்.

இந்த படத்தில் நாசர், ஜெயப்பிரகாஷ், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சைமன் கே கிங் இந்த படத்துக்கு இசையமைக்க, ரசமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கேஎல் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap