அன்னையர் தினத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!!

அனுராதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்ள பிறந்துள்ளன. 30 வயதுடைய பெண் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் இந்த குழந்தைகளை பெற்றேடுத்துள்ளார்.

குறித்த பெண் கர்ப்பமடைந்து 8 மாதங்களும் ஒரு வாரமும் கடந்திருந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரசவிப்பதற்கு பேராதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய நேற்று வெற்றிகரமாக இந்த 4 குழந்தைகளையும் வைத்தியர் பிரசவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாப்பட்ட நிலையில், நான்கு குழந்தைகள் பிறந்தமை சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap