கொரோனாவில் இருந்து தப்பிக்க கணவர், குழந்தைகளுடன் அமெரிக்கா சென்ற கவர்ச்சி நடிகை!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சென்று உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இந்த கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அமெரிக்கா செல்ல சன்னிலியன் முடிவு செய்ததாகவும் இதனை அடுத்து கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று விட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து சன்னி லியோன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது கார்டனில் உள்ள வீட்டில் தற்போது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், கண்ணுக்கு தெரியாத வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும் தனது தாயாரின் இப்போது இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்றும் சன்னி லியோன் குறிப்பிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்

உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் சன்னிலியோன் இருக்கும் பகுதி பாதுகாப்பான பகுதி என்பதால் அவரும் அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளும் கொரோனா வைரஸின் பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்னி லியோன் எப்படி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றார் என்ற கேள்விக்கு பதிலளித்து சன்னி லியோனின் கணவர், ‘அரசின் KLN விமானத்தில்தான் மும்பையில் இருந்து அமெரிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்

Share via
Copy link
Powered by Social Snap