அடிக்கடி குளிர்பானங்களை அருந்துபவர்களா நீங்கள்?.. அப்படி என்றால் உங்களுக்கான அதிர்ச்சி தகவல் இதோ..!

Cold cocktail with lemon

இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல்கள், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது.

எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே அருந்தி வருகின்றனர். இதனால் உங்கள் உடலுக்கு மிகப்பெரிய கெடுதல்களை உண்டாக்கும்.
இந்த குளிர்பானங்களில் இருக்கும் ஒரு வகை போதை பொருள் அதை மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் யுக்தியை கையாள்கிறது.

இதுவே குளிர்பானங்களுக்கு உங்களை அடிமையாக்குகிறது. இவற்றால் உண்டாகும் உங்களுக்கு ஏற்படும் தீமைகளை இப்பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.

உலகம் முழுவதிலும், குளிர்பானங்களால் உயிரிழக்கக் கூடியோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து எண்பத்தி நாலாயிரமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. நாளொன்றுக்கு 3 லிட்டருக்கு மேல் இவ்வகை குளிர்பானங்கள் அருந்துபவர்களுக்கு நிச்சயம் மரணம் சம்பவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் குளிர்பானம் அருந்துவதால் ஏற்படும் உடல் கோளாறுகள் ஏராளமாக உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் குளிர்பானங்களில் இருந்து சற்று தள்ளியே இருப்பது தான் நல்லது.

ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குளிர்பானம் குடிக்கும் நபர்கள் தீய எண்ணங்களுக்கு உட்பட்டவராக இருப்பார்கள் என்று அதிர்ச்சி தரும் சர்வேயும் வெளியாகியுள்ளது. அவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடிய தூண்டுதல்களை மூளையில் பெற்றிருப்பார்கள். மிகவும் ஆக்ரோஷமாகவும் இவர்கள் மாறிவிடுகிறார்கள். அதிகம் கோபப்படும் நபராகவும் இருக்கிறார்கள். ஆல்கஹால் மட்டுமல்ல கூல் டிரிங்க்ஸ் கூட பிரச்சனை தான்.

கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் இவ்வகை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கலினால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிதை மாற்றத்தில் எதிர்வினை உண்டாகி குறைமாதத்தில் குழந்தை பிறக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சிறுவயதில் பெண்கள் பூப்பெய்துவதற்கும், சிறுவர்கள் வகைதொகை இல்லாமல் உடல் எடை கூடுவதற்கும் இவ்வகை குளிர்பானங்களை அதிகம் அருந்துவதும் ஒரு காரணம் ஆகும். இதனால் அவர்களின் மூளையில் ரசாயன மாற்றம் உண்டாகி இவ்வகைப் பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து வாரம் முழுவதும் செயற்கை குளிர்பானங்களை அருந்தி வந்தால் கணையம் பாதிக்கப்பட்டு தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.

இதனால் கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. செயற்கை குளிர்பானங்களை அதிகம் குடிக்கும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கக்கூடிய சதவீதம் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பெண்களுக்கு மார்பக புற்று நோயையும், குடல் புற்றுநோயையும் உண்டாக்கக்கூடிய நச்சுத்தன்மையை இவ்வகை செயற்கை குளிர்பானங்கள் கொண்டுள்ளன.

மேலும் ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 2 கேன் செயற்கை குளிர்பானங்கள் அருந்துபவர்களுக்கு கல்லீரல் கடுமையாக பாதிப்படைகிறது. அதனை தொடர்ந்து கல்லீரல் செயலிழக்கப்படுகிறது.

அமெரிக்க மருத்துவர்களால் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் குளிர்பானங்கள் அதிகம் அருந்தியதால் சர்க்கரை நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இதுபோன்ற செயற்கை குளிர்பானங்களில் கலோரிகள் அதிகம் இருக்கும். அதிக கலோரிகளினாலும், இதில் இருக்கும் சர்க்கரையின் அளவினாலும் வயது வித்தியாசமின்றி சர்க்கரை நோய்க்கு ஆளாக்கப்படுகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap