”அவங்க Yes சொல்லிட்டாங்க” – குஷியில் ‘பாகுபலி’ நடிகர் வெளியிட்ட ஃபோட்டோ

ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களான வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபாஸ், ராணா , அணுஷ்கா , தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

குறிப்பாக வில்லனாக ராணா இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார். ராணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் தல அஜித்துடன் ‘ஆரம்பம்’, ‘பெங்களூர் நாட்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் ‘காடன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோ என்று ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஃபவுண்டர் மிஹீகா பஜாஜ் ( Miheeka Bajaj) உடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்து, ”அவங்க Yes சொல்லிட்டாங்க” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சமந்தா, ஸ்ருதி ஹாசன், தமன்னா, ராஷி கண்ணா, காஜல் அகவர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

And she said Yes 🙂 ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

Share via
Copy link
Powered by Social Snap