இந்த குட்டி பையன் இன்னைக்கு பெரிய நடிகர்… சமீபத்துல கூட அப்பாவானாரு… Guess பண்ணுங்க பாக்கலாம்..?

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி தற்போது மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரசன்னா. ஆரம்பத்தில் கியூட்டான ரோல்களில் நடித்து வந்த அவர், ‘அஞ்சாதே’ படம் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின்பு நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஜோடிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் அவர்கள் இருவரும் 8 ஆம் ஆண்டு திருமண தினத்தை கொண்டாடினர்.

கடந்த ஜனவரி மாதம் சினேகா- பிரசன்னா தம்பதியருக்கு அழகிய குழந்தை பிறந்தது. அதே போல் அன்னையர் தினத்தன்று அவர் வெளியிட்ட சிறுவயது புகைப்படம் வைரலானது. அதில் அவர் தனது மகன் போலவே காட்சியளிக்கிறார். கடைசியாக அவர் அருண் விஜய்யுடன் ‘மாஃபியா’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து விஷாலுடன் துப்பறிவாளன்2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap