என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. பிரதமர் மோடி பேச்சை கிண்டலடித்த நடிகை!

பிரதமர் மோடியின் பேச்சால் நேரம்தான் வீணானது என விமர்சித்த பிரபல நடிகையை வலைதள வாசிகள் வச்சு செய்து வருகின்றனர்.கொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவும் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அப்போது கொரோனா வைரஸின் பாதிப்பு மக்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது என்றார்.தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, ஒரு வைரஸ் உலக நாடுகளை நாசப்படுத்தியிருப்பதாக கூறினார். கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று ம் கூறினார் பிரதமர் மோடி.

மேலும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றார் பிரதமர் மோடி.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி 4வது கட்டமாக இந்தியாவில் லாக்டவுன் இருக்கும் என்றார். ஆனால் 4வது கட்ட பொதுமுடக்கம் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதுதொடர்பான விபரங்கள் வரும் 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

மோடியின் பேச்சுக்கு குறித்து சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரதமர் மோடியின் பேச்சு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மிகவும் கடினமான இந்த காலங்களில் ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சத்தை எப்படி டெபாசிட் செய்வது மோடிஜி 2014 இல் வாக்குறுதியளித்தபடி?? இது நெருக்கடிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? சொலுங்க சாமி, பதினைந்து லட்சம் கொஞ்சம் எல்லா அக்கவுண்ட்லேயும் போட்டிங்கன்னா நல்லா இருக்கும்ல சொல்லுங்க.. என பதிவிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap