
வாணியம்பாடியில் கடைவீதிகளில் வியாபாரிகளின் விற்பனை பொருட்களை நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் வீதிகளில் கொட்டி கவிழ்க்கும் காணொளி வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லாக்டவுன் காலத்தில் திறக்கப்பட்ட பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அகற்ற நடவடிக்கை மேற்கொள்கிறார்.
அப்போது தள்ளுவண்டிகளில் இருந்த பழங்களை கீழே வீசி எறிகிறார். சில வண்டிகளை அப்படியே கொட்டி கவிழ்த்துவிட்டு செல்கிறார்.வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார்.. இதனை பார்த்த இணையவாசிகள் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.
எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.