
வைரஸ்கள், பக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் நுழைந்தவுடனேயே நம் உடல் முதலில் அதை எதிர்த்து போராடும்.
இதை தான் நோய் எதிர்ப்பு மண்டலம் அதாவது Immune System என்றழைக்கிறோம், இந்த போராட்டத்தில் நோய் எதிர்ப்பு மண்டலம் தோல்வி அடைந்தால் மட்டுமே நோய்கள் நம்மை அண்டிக் கொள்ளும்.
எனவே இயற்கையாக நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது எப்படி, இது எப்படி செயல்படுகிறது, ஒருவொருக்கொருவர் நோய் எதிர்ப்பு சக்தி வேறுபடுவது ஏன் என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடையை இங்கு தெரிந்து கொள்வோம்.