கொரோணாவிற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 4வது இடத்தில் உள்ளது. அங்கு 2 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பொழுது கொரோனா நோய்க்கெதிராக பல ஆராச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பிரித்தானியாவிலும் ஆராச்சிகள் நடைபெற்ற வண்ணமிருக்கின்றது. .

பிரித்தானிய பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் வேகமாக நடக்கின்றன.

இங்கிலாந்தில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஆய்வாளர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொரோனா வைரஸுக்கான முழுமையான தடுப்பூசி கண்டறிய ஓராண்டுக்கு மேல் ஆகலாம். ஒருவேளை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமலேயே கூட போகலாம். எனவே, எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்,’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap