சித்தப்பாக்களால் கண்முன் துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட அப்பா, அம்மா… செல்போனை எடுத்து கதறிய 4 வயது குழந்தை!

ஊரடங்கு காலத்திலும் வீடு புகுந்து 4 வயது சிறுமியின் முன் அவரின் அப்பா அம்மாவை சராமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் கரூர் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்யும் ரங்கநாதன் என்பவர் கரூர் மாவட்டம் மணவாடியை அடுத்த அய்யம்பாளையத்தில் தனது மனைவி தீபிகா, 4 வயது மகள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு (திங்கட்கிழமை) மர்ம நபர்கள் சிலர் தீடீரென ரங்கநாதன் வீட்டுக்குள் புகுந்து ரங்கநாதனையும் அவரது மனைவி தீபிகாவையும் அவர்களது 4 வயது குழந்தையின் முன் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளது.

அவர்கள் வசிக்கும் பகுதியின் குடியிருப்புகள் தனித்தனியாகவும், தூரமாகவும் இருந்த காரணத்தால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இவர்களின் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
குழந்தையின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் செய்வதறியாது விழித்திருந்த குழந்தை, தந்தையின் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து டயல் லிஸ்டில் இருந்த உறவினருக்கு போன் செய்துள்ளது.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் இரத்த வெள்ளத்தில் இருந்த தீபிகாவையும், ரங்கநாதனையும் பார்த்து அதிர்ந்த அவர்கள் சிறுமியையும் மீட்டு, பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியோடு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வந்த நிலையில், கொலையை செய்தது ரங்கநாதனின் சித்தி மகன்கள் லோகநாதன்(31), பிரவீண்(26), கவுதமன்(24), ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவருமே குளித்தலை காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

குடும்பத்துக்குள் சொத்து தகராறு ரொம்ப வருஷமாகவே இருந்து வந்துள்ளது.. அதனால்தான் சித்தி மகன்கள் 3 பேருமே சேர்ந்து அண்ணனுடன், அண்ணி தீபிகாவையும் சேர்த்து வெட்டி கொலை செய்துள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

Share via
Copy link
Powered by Social Snap