பிரபல நடிகையின் வாழ்க்கையில் நேர்ந்த சோகம் : பெரும் இழப்பால் எடுத்த அதிரடி முடிவு!!

தமிழில் பல திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பவர் நடிகை சித்தாரா. புது புது அர்த்தங்கள், புது வசந்தம் படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

முக்கிய ஹீரோக்களின் படங்களிலும் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு வயது 47 ஆகிவிட்ட நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் அண்மையில் அளித்துள்ளா பேட்டியில் அதன் காரணத்தை கூறியுள்ளார்.

இதில் அவர் என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்தேன். காரணம் முக்கிய நபரை என் வாழ்வில் இழந்துவிட்டேன். அந்த நபர் என் அப்பா. அவர் இறந்த பிறகு திருமணம் பற்றிய எண்ணமே எனக்கு வரவில்லை என கூறினார்.

மேலும் இந்த வயதில் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற துணை கிடைத்தால் திருமணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு அவர் கண்டிப்பாக திருமணம் செய்ய மாட்டேன் என பதிலளித்துள்ளார்..

Share via
Copy link
Powered by Social Snap