மாற்றுத்திறனாளியின் கனவை நிறைவேற்றிய நடிகர் விஜய்!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவரிடம் அவரது நண்பரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கோரிக்கை ஒன்றை சமீபத்தில் விடுத்திருந்தார்.

காஞ்சனா படத்தில் நடித்த மாற்று திறனாளி ஒருவர் மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கமிங் பாடலை 3 நாட்கள் மட்டுமே பயிற்சி செய்து மிகவும் அழகாக இசையமைத்த வீடியோவை வெளியிட்டு, அதனுடன் விஜய் சார் முன்னாடி இதை வாசித்து காட்டுவதும், அனிருத் இசையமைப்பில் செய்து காட்டுவது தான் இவரது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த வீடியோவை விஜய் அவர்கள் பார்த்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, நான் நண்பன் விஜய்யிடம் பேசியதாகவும், இந்த லாக்டவுன் முடிவடைந்த பின்னர் மாற்றித் திறனாளியான அவரை ஒருமுறை விஜய் முன்னிலையில் வாசித்து காட்ட கூறியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அனிருத் சார் எனது வேண்டுகோளை உடனடியாக ஏற்று அவரது மியூசிக்கில் இசையமைக்க வைப்பதாகவும் கூறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். எனவே அவரின் கனவை நனவாக்கிய நண்பர் விஜய் மற்றும் அனிருத் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap