
இன்றைய அவசர கால உலகில் பெரும்பாலானோர் மனப்பிடிப்பு இல்லாமல் இறுக்கத்துடனேயே பொழுதை தொடங்குகின்றனர், என்னமோ தெரியலை… காலையில் எழுந்திருக்கும் போதே அலுப்பா இருக்கா, உடம்பெல்லாம் வலிக்கும் என சொல்பவர்கள் ஏராளம்.
எந்தவித இடையூறும் இல்லாமல் 7-8 மணிநேர தூக்கம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று.இப்படி சரிவர தூக்கம் இல்லாமல் போவது, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானது, மனதுக்கு பிடிக்காத வேலை என சோர்வுக்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதுமட்டுமின்றி சரிவிகித உணவு இல்லாமல் போவதும் சோர்வை தரும். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சோர்வை போக்கலாம்.அதற்கு நாம் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்க்கலாம்.