உச்சந்தலையில் படியும் அழுக்குகளை அடியோடு அழிக்க வேண்டுமா?.. இப்படி ஸ்கரப் செய்யுங்கள்…!

நீங்கள் ஆரோக்கியமான முடியை பெற விரும்பினால் உங்க உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமாம். எனவே முதலில் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் செய்ய வேண்டும்.முடி மற்றும் உச்சந்தலையில் படிந்துள்ள அழுக்குகள், தூசிகள் உங்க சரும துளைகளை அடைக்கக் கூடும். எனவே சரும துளைகள் அடைக்கப்படுவதால் மயிர்க்கால்களில் இருந்து முடி வளர்வது தடைபடுகிறது.

இதனால் தான் கூந்தல் பராமரிப்பு என்று வரும் போது ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் மற்றும் ஷாம்பு பயன்படுத்துவதோடு ஹேர் ஸ்க்ரப்பிங் செய்வதும் மிக முக்கியம்.இது சரும துளைகளை அடைத்து கொண்டிருக்கும் தூசிகள், இறந்த செல்கள், அழுக்குகள் இவற்றை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.இதனால், உச்சந்தலையை வீட்டில் இருந்த படியே சுத்தம் செய்யலாம், அதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

* கடல் உப்பு – 3 டேபிள் ஸ்பூன்
* லெமன் ஜூஸ் – 2 டீஸ்பூன்
* ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
* முதலில் உங்க தலையை சிறிது தண்ணீர் கொண்டு நனைத்து கொள்ளுங்கள்.
* பிறகு இந்த ஸ்க்ரப்பை எடுத்து தலையில் தடவி உங்க விரல்களால் மசாஜ் செய்யுங்கள்.
* இதை சில நிமிடங்கள் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவி விடுங்கள்

Share via
Copy link
Powered by Social Snap