தக்காளியை தாக்கிய புது வைரஸ்.. அதிர்ச்சியில் மக்கள்.. கவலையடைந்த விவசாயிகள்..!

மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் உள்ள தக்காளிகளை அடையாளம் தெரியாத வைரஸ் ஓன்று தாக்கி வரும் நிலையில், இந்த நோயைப் பற்றி அந்த பகுதி விவசாயிகள் தீவிரமாக கவலைப்பட்டுள்ளனர்.அந்த புதுவித நோய் தக்காளி பயிர்களை முன்கூட்டியே பழுக்க வைக்கிறது, இதனால் அவர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த நோய்க்கு மூவர்ண வைரஸ் என பெயர் வைத்துள்ளனர். காரணம், இந்த வைரஸ் தாக்கியதும் அனைத்து தக்காளி பழமும் வெளிப்புறத்தில் மஞ்சள் நிறத்திற்கும், உள்புறத்தில் கருப்பு நிறத்திலும் மாறுகிறது. மேலும் தக்காளி வடிவத்தில் இல்லாமல் உருவத்திலும் கரடு முரடாக மாறுகிறதாம்.

அதன் பின்னர் தக்காளி அழுக தொடங்கி, செடிகள் பட்டுபோய் விடுகிறதாம். பின்னர் தக்காளியும் வெள்ளை நிறத்திற்கு மறுகிறதாம். இதுகுறித்து கவலையடைந்துள்ள விவசாயிகள் இன்னும் ஒரு வருடத்திற்கு அந்த நிலங்களில் தக்காளி பயிரிட முடியாது என கவலை தெரிவித்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap