படையப்பா ஸ்டைலில் வருங்கால கணவரை கலாய்த்த தமிழ் நடிகை!

தொலைக்காட்சி மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானிசங்கர், கோலிவுட் திரையுலகில் கார்த்திக் சுப்புராஜின் ’மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ எஸ்ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ மற்றும் அருண்விஜய் நடித்த ’மாஃபியா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவர் உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது அவர் ஒரே நேரத்தில் சுமார் ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகை பிரியா பவானிசங்கர் சமீபத்தில் ராஜவேல் என்பவரை தான் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் புகைப்படத்துடன் அறிவித்தார். ராஜவேல், பிரியா பவானிசங்கருடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது காதலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பிரியா பவானிசங்கர் வெளியிட்டு ’மாப்பிள்ளை இவர்தான் ஆனா அவர் போட்டிருக்கும் கண்ணாடி’ என்று ரஜினியின் படையப்பா பட ஸ்டைலில் காதலுடன் கலாய்த்து ஒரு பதிவை பதிவுசெய்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap