பிரபல நடிகர் பண்ணை வீட்டில் திருமண நிகழ்ச்சி ஆரம்பம்… பெண் டாக்டரை மணக்கிறார்…!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பல பிரபலங்களும் எளிமையான முறையில் திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற நடிகர் நிகில் சித்தார்த்தா, டாக்டர் பல்லவி வர்மா திருமணம் நிகழ்ச்சி துவங்கியது. நடிகர் நிகில் ‘ஹேப்பி டேஸ்’ திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்த திரைப்படம் ‘இனிது இனிது’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘நிகில்’, ‘சுவாமி ரா ரா’, ‘கார்த்திகேயா’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகர் நிகில் தனது பண்ணை வீட்டில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே ஆரம்பமாகியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap