வைச்ச கண் வாங்கமால் தாயை பார்த்துகொண்டே இருக்கும் குழந்தை… இணையத்தில் பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சி!

தாய் ஒருவர் டிவி பார்த்துக் கொண்டு இருக்கிறார். அப்போது கையில் தனது குழந்தையை வைத்துக் கொண்டு வீடியோவும் எடுத்துக் கொண்டே இருக்கிறார். முதலில் அந்த குழந்தை தனது தாயைப் பார்க்கத் தொடங்குகிறது.

பின்னர், அந்த தாய் தனது குழந்தையைப் பார்த்துச் சிரிக்கிறார். அந்த குழந்தையும் அவரை பார்த்துச் சிரிக்கிறது. சிறிது நேரத்தில் அந்த குட்டி பையன் தனது பார்வையை மாற்றி விடுவான் என அனைவரும் எண்ணும் நேரத்தில், வச்ச கண் எடுக்காமல் தனது தாயையே பார்த்துக் கொண்டு இருக்கிறான். அந்த வீடியோ முடியும் வரை ஒரே போஸில் தனது தாயைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ஷேர் செய்து வரும் பலரும், எங்குப் பார்த்தாலும் கொரோனா குறித்த செய்திகள் உலா வரும் நிலையில், இது போன்ற வீடியோகள் சற்று நிம்மதியை அளிப்பதாக தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

Share via
Copy link
Powered by Social Snap