
நமது பூமி என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல. பறவைகள், விலங்குகள், மரங்கள் என அனைத்திற்கும் பூமியின் மீது பங்குள்ளது.பொதுவாக பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் மனிதர்களை விட உணர்திறன் மிகவும் அதிகம்.
அவற்றை சுற்றி நடக்கபோகிற நல்லது மற்றும் கெட்டது அனைத்தையும் அவற்றால் முன்கூட்டியே உணரமுடியும். இந்த பதவில் பறவைகள் மற்றும் விலங்குகள் கூறும் நல்ல மற்றும் கெட்ட சகுனங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
காகம்
உங்கள் வீட்டிற்கு அருகிலேயோ, உள்ளேயோ காகம் வருவது சிறந்த நல்ல சகுனமாகும். இதன் வருகை மட்டுமின்றி இதன்தனித்துவமான சத்தம் உங்களுக்கு நல்ல செய்தி வரபோவதற்கான அறிகுறி ஆகும்.
நாய்
நாய்கள் ஊளையிடுவது பொதுவாக மரணத்தின் அறிகுறி என்று கூறப்படுகிறது.
குருவிக்கூடு
உங்கள் வீட்டிற்குள் குருவிக்கூடு கட்டுவது உங்களை தேடி அதிர்ஷ்டம் வரபோவதன் அறிகுறி ஆகும்.
மயில்
பயணத்தின் போது உயரமான இடத்திலோ அல்லது சாலை ஓரமாகவோ மயிலை பார்ப்பது நல்ல சகுனமாகும். ஆனால் அதன் அகவல் சத்தத்தை கேட்பது நல்ல சகுனமல்ல. எனவே வெளியே செல்லும்போது மயிலின் சத்தத்தை கேட்டால் ஜாக்கிரதையாக இருக்கவும்.
யானை
இது மிகவும் புனிதமான மிருகமாகவும் இதனை பார்ப்பது நல்ல சகுனமாகவும் கருதப்படுகிறது.
பல்லி
அவற்றின் சத்தங்கள் நல்ல சகுனமாக கருதப்படும், ஆனால் அது தலையில் விழுவதோ மற்ற இடங்களில் விழுவதோ எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வௌவால்
வௌவால் பொதுவாக அனைவரையும் பயமுறுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் வௌவால் உங்கள் வீட்டிற்குள் வருவது மகிழ்ச்சியின்அறிகுறியாகும் . அதேசமயம் வௌவால் சில சமயங்களில் துர்சகுனமாகவும் இருக்கும், ஒரு வீட்டை சுற்றி மூன்று முறை வௌவால் வட்டமடித்தால் அங்கு விரைவில் ஒரு உயிர் பிரியும்.