என் பொண்டாட்டி என்ன வேலைக்காரின்னு நினைச்சீங்களா?.. விடிவி கணேஷை வைச்சு செய்த சிம்பு..!

சிம்புவின் நெருங்கிய நண்பராக இருப்பவர் விடிவி கணேஷ். சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா, போடா போடி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.இந்நிலையில், இருவரும் ஊரடங்குக்கு முன்னர் இருவரும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், சிம்பு, சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் உரையாடுகிறார்.

அதில், வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவிங்க போல இருக்கே என்று விடிவி கணேஷ் கேட்க, என்னை கல்யாணம் செய்து கொண்டு வரும் பெண் வேலை செய்வதற்காவா வராங்க.

அவங்க என்ன வேலைக்காரங்கனு நினைச்சீங்களா, அதெல்லாம் உங்களை மாறி ஆளுங்க தாங்க பண்ணுவாங்க நான் இல்லை.
பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்று விடிவி கணேஷிடம் விளையாட்டாக பேசியுள்ளார். இந்த வீடியோ சிம்பு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Share via
Copy link
Powered by Social Snap