குழந்தையாக வளர்த்த பசுமாடு உயிருக்கு போராடிய போது… காப்பாற்றச் சென்று உயிரைவிட்ட பெண்!

சினையாக இருந்த பசுமாட்டை காப்பாற்ற சென்று பெண் உயிரிழந்த சம்பவம் ஒரத்தநாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஒரத்தநாடு அருகேயுள்ள கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கையன். இவரது மனைவி சரோஜா (53) இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

விவசாய வேலைகளுடன் இருவரும் மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். சம்பவ தினத்தன்று தன்னுடைய வீட்டில் சினையாக இருந்த பசுமாட்டை சரோஜா மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

மாட்டை மேயவிட்டு அவர் வயலில் தன்னுடைய வேலைகளை பார்த்திருந்த தருணத்தில், கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை பசுமாடு மிதித்து உயிருக்கு போராடியுள்ளது.
இதைப்பார்த்த சரோஜா சற்றும் யோசிக்காமல் பசுமாட்டை காப்பாற்ற சென்ற போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் பசுமாட்டுடன், அவரும் உயிரிழந்துள்ளார்.

பின்பு கிராம மக்கள் தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Share via
Copy link
Powered by Social Snap