கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து எவ்வளவு நேரத்தில் பரவுகிறது; புதிய வீடியோவை வெளியிட்ட நிறுவனம்!

உலக மக்களையே அடிமையாக வீட்டில் வைத்திருக்கும் கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும், தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. இதுவரை 3 லட்சம் பேர் இந்த தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில் உலக பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொடர்பான புதிய வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கொரோனா எவ்வளவு நேரத்தில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது என்பதை விளக்கி இருக்கின்றனர்.ஜப்பான் நாட்டின் உணவகத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பஃபே முறையை வைத்து, ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா எப்படி பரவுகிறது என்பதை விளக்கி இருக்கின்றனர்.

மேலும், இதை பொது ஒளிபரப்பு மையமான என்.ஹெச்.கே (NHK) சுகாதார நிபுணர்களுடன் இணைந்து நடத்தியுள்ளது. வீடியோவில் 10 நபர்கள் உள்ளே வருகின்றனர்.அதில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் போன்றும் மற்றவர்கள் எந்தவித நோய்த்தொற்றும் இல்லாதவர்கள் போன்றும் காட்டப்படுகிறது. வீடியோவின் முடிவில் கொரோனா எந்தெந்த இடங்களில் எப்படி பரவுகிறது? என்பதை நீல ஒளி வைத்து சுட்டிக்காட்டுகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap