மவுத் வாஷ் மூலம் கொரோனாவை அழிக்க முடியுமா?…

வாயை சுத்தப்படுத்த பயன்படும் மவுத் வாஷ் கொரோனாவை தடுக்குமா? என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய உள்ளனர்.
மனித உடலில் வாய் வழியாக கொரோனா வைரஸ் பரவி அது உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி விடுகிறது. தொண்டையில் சளி மற்றும் எச்சில் மூலமாகவும் வைரஸ் பரவி நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு விட சிரமத்தை ஏற்படுத்துகிறது.

கொரோனாவை போன்றே வாய் மூலமாக பரவும் பிற வைரஸ்களை அழிப்பதில் மவுத் வாஷ் முக்கிய பங்காற்றுகிறது. மவுத் வாஷர் மூலம் வாயை சுத்தப்படுத்துவதால் அந்த திரவம் வாயில் இருக்கும் வைரஸ் படலங்கள், பாக்டீரியாக்கள், கிருமிகளை அழித்து விடுகிறது.இந்த நிலையில், கொரோனாவை சுற்றி பாதுகாப்பு அரணாக இருக்கும் கொழுப்பு படலத்தை மவுத் வாஷ் திரவம் சேதப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அந்த கொழுப்பு படலம் சேதமடைந்தால் தொண்டையில் இருக்கும் வைரஸ் ஆரம்ப நிலையிலேயே செயலற்று அது மனித உடலில் மேலும் பரவும் வேகமும் குறையலாம் என விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.

இதனால், மவுத் வாஷ் திரவம் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்துகிறதா? என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய அறிவியல் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap