13 வயது சிறுமியை மயக்கிய மாணவன்.. தனிமையில் சந்தித்தபோது இருவரால் நடந்த விபரீத சம்பவம்!

தமிழகத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகேயுள்ள புங்கசாவடி பகுதியை சேர்ந்தவரின் மகள் 8 வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 15 வயது சிறுவனும் பயின்று வருகிறான்.
இந்த நிலையில், சிறுமியுடன் 15 வயது சிறுவன் நட்பாக பழகி வந்துள்ளான். இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காமுகன், அவ்வப்போது சிறுமியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை வைத்து தனிமையில் பேசி வந்துள்ளான்.

இவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருப்பதை அப்பகுதியை சார்ந்த கல்லூரி மாணவன், ஜன்னல் வழியாக கண்டுகொள்ளவே, நடந்ததை வெளியில் கூறிவிடுவேன் என்று கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், காதலன் என்று கூறிய அந்த சிறுவனும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால், கடுமையான வயிற்று வலி மற்றும் உடல் பிரச்சனைகளால் சிறுமி அவதியுற்று வரவே, சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வாந்தியும் எடுத்து அவதியுற்று வந்த நிலையில், சிறுமி உடல்நிலை குறித்து தாயிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாய் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமியை அனுமதி செய்யவே, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சிறுமி அங்குள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விஷயம் குறித்து சிறுமியின் தாயார் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap