8 மாத கர்ப்பிணி மனைவியையும், கைக்குழந்தையையும் 700 கி.மீற்றர் அழைத்து வந்த நபர்… எப்படினு நீங்களே பாருங்க!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ராமு என்பவர், தனது கர்ப்பிணி மனைவி மற்றும் அனுராகினி என்ற கைக்குழந்தையுடன் ஹைதராபாத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால், உணவு இன்றி, கையில் காசும் இல்லாமல் தவித்த இவர், தனது குடும்பத்துடன் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்ல திட்டமிட்டார்.

தன் மகளை தோளில் சுமந்துகொண்டு கர்ப்பிணி மனைவியோடு சில கிலோ மீற்றர் தூரம் உணவுகூட கிடைக்காமல் நடந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய பெண் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு நடக்க முடியாது என்பதை உணர்ந்த ராமு செய்வதறியாது திகைத்துள்ளார்.

அப்பொழுது அவர்கள் சென்ற காட்டுவழிப் பாதையில் கிடைத்த குச்சிகளையும், மரப் பலகைகளையும் வைத்து கைகளால் இழுத்துச் செல்லக்கூடிய மர தள்ளுவண்டி ஒன்றை அவரே தயார் செய்து அதில் கர்ப்பிணி மனைவியையும், கைக்குழந்தையையும் 700 கிலோ மீற்றர் வரை அழைத்து வந்துள்ளார்.இந்நிலையில் வழியில் பொலிசார் தடுத்து விசாரித்த போது, நடந்ததைக் கூறிய ராமுவிற்கு, பொலிசார் உணவு வாங்கிக்கொடுத்து, செல்வதற்கு வாகன வசதியையும் ஏற்படுத்திகொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். இக்காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap