இரவில் தூங்க செல்லும் முன் வெல்லம் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பது ஏன் தெரியுமா?.

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.இதுபோன்று இயற்கையான உணவுகளை உண்பதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

அந்த வகையில், இயற்கை நமக்கு கொடுத்த மிக சத்து வாய்ந்த உணவுகளில் ஒன்று இந்த வெல்லம். வெல்லத்தை நமது உணவில் சேர்த்துக்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் என்று பார்க்கலாம் வாங்க..
* பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம். வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது.
* காலையில் வெல்லம் மற்றும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உங்கள் வயிற்றை சுத்தம் செய்து, செரிமானத்தை மேம்படுத்தி, அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் செரிமான நோய்கள் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.
* வெல்லம் இரைப்பை சாறுகளின் சரியான சுரப்பிலும் உதவுகிறது, எனவே, எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் மூல காரணத்தை ஒதுக்கி வைப்பது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க வெல்லம் உதவுகிறது.
* ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெல்லத்தை தண்ணீரில் கலந்து உண்டுவந்தால் அவை உடலில் உள்ள நச்சுக்களை விலக்குகின்றன. மேலும் இது உணவுக்குழாயில் உள்ள கபத்தை வெளியே எடுக்க உதவுகிறது.
* உடலில் ஊட்டச்சத்துக்களைப் பெற முடியாமல் பபலவீனமாக இருப்பவர்கள் வெல்லத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
* இரத்த சோகை உள்ளவர்கள் இரவில் உறங்கும் முன் வெல்லத்தை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும், ஏனென்றால் வெல்லம் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள இரும்பின் அளவை அதிகரிக்கிறது. இது இரத்த சோகை பிரச்சினையை நீக்குகிறது.
* பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.

Share via
Copy link
Powered by Social Snap