தாயின் கண்முன்னே இரட்டை சகோதரிகளுக்கு நடந்த பயங்கரம்! பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம்… ஒட்டு மொத்த கிராமமும் சோகத்தில்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை, விவசாயின் மனைவி கண்ணம்மாளுடன் குளிக்க சென்ற இரட்டையர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வீரமலை – கண்ணம்மாள் தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்குப் பின்பு பிறந்த ராமு பிரியா(வயது 9), லட்சுமி பிரியா (9) ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள்.
இருவரும் வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அந்த பகுதியில் உள்ள கும்படிக்குளத்தில் சகோதரிகள் இருவரும், தங்கள் தாயுடன் குளிக்க சென்றுள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினார்கள். இதனைப் பார்த்து அதிர்ந்து போன கண்ணம்மாள் கதறினார். அப்போது கண்ணம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். பிறப்பால் இரட்டையர்களாக இருந்த சகோதரிகள், இறப்பிலும் ஒன்றாகவே இணைந்த சம்பவம், அந்த குடும்பத்தை மட்டுமல்லாது, அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap