வயிற்றுவலியால் துடிதுடித்த 13 வயது மகள்!… பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்ததில், கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.சேலத்தின் புங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(கூலித்தொழிலாளி), இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரும், அதே பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனும் காதலித்து வந்துள்ளனர், இருவரும் ஒரே தெருவில் வசிப்பதாலும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்துள்ளனர்.
இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவர் கண்டுபிடித்ததுடன், சிறுமியை மிரட்டியே தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அடிக்கடி வயிற்றுவலியும் இருந்ததால் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் சிறுமியின் தாயார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர், இதனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கல்லூரி மாணவன் மற்றும் காதலை பொலிசார் கைது செய்துள்ளனர்.மேலும் மாணவிக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap