வெளிநாட்டில் இருந்து பரிசுகளுடன் மனைவியை வந்து பார்க்க திட்டமிட்ட கணவன்! அப்போது பேரிடியாக அவருக்கு வந்த செய்தி!

வெளிநாட்டில் கணவர் பணிபுரியும் நிலையில் கேரளாவில் உள்ள மனைவி திடீரென உயிரிழந்தது அவரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்தன் பிரபாகரன் நாயர் (48). இவர் மனைவி மினி (39). தம்பதிக்கு சோனா என்ற மகள் உள்ளார்.பிரசாந்தன் துபாயில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் மினி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து வியாழன் அன்று அவர் உயிரிழந்துள்ளார்.

தகவல் துபாயில் உள்ள பிரசாந்தனுக்கு பேரிடியாக வந்தது.
இது குறித்து துபாயில் உள்ள சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹாசிக் கூறுகையில், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த மினி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த செய்தி பிரசாந்தனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏனெனில் இந்த மாதத்தில் மனைவி, மகளை பரிசுகளுடன் வந்து பார்க்க பிரசாந்தன் திட்டமிட்டிருந்தார்.
சனிக்கிழமை திருவனந்தபுரத்துக்கு கிளம்பும் விமானத்தில் பிரசாந்தன் பயணித்து தனது மனைவி மினிக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளவுள்ளார் என கூறியுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap