உணவு இல்லாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் செய்த உதவி.. குவியும் பாராட்டுக்கள்!

இந்தியாவில்கொரோனாவைரஸ்ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலரும் வேலையிழந்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலையில்லாமல், உணவின்றி தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கினர். மேலும் ஊரடங்கால் பேருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் நடந்தே செல்கின்றனர்.

அவ்வாறு நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் பண்ணை வீட்டில் தங்க இடமளித்து உணவு வழங்கி, அவர்களுக்கு தேவையானதை செய்துவருகிறார்.
நான் பிச்சை எடுக்கிறேனோ அல்லது கடன் வாங்குகிறேனோ, ஆனால் என்னால் இயன்ற வரை என்னை கடந்து செல்லும் என் சக மனிதனுக்கு நான் உதவிக்கொண்டே இருப்பேன். அவர்கள் எனக்கு திரும்ப எதுவும் செய்யவேண்டாம்.

ஆனால், அவர்கள் தங்கள் இல்லத்தை அடையும்போது, நாங்கள் வரும் வழியில் தளர்வடைந்தபோது உறுதுணையாக ஒருவன் எங்களுக்கு உதவினான் என நினைத்துபார்த்தாலே எனக்கு போதும் என பதிவிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap