உலகின் மிகச்சிறிய குட்டி நாடு!… இங்கு மக்கள்தொகை மட்டும் எத்தனை பேர் தெரியுமா?

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் இருந்து 400 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள 33 குடிமக்களுடன் உலகின் மிகச்சிறிய குடியரசு தான் இந்த மொலோசியா.
மொலோசியா என்ற குட்டி நாட்டில் வெறும் 33 குடிமக்களே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நாட்டின் ஜனாதிபதியாக கூறிக்கொள்ளும் கெவின் பாக் என்பவரின் உறவினர்களே.

குட்டி நாடாக இருந்தாலும், தங்கள் குடிமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்வதாக கூறுகிறார் 57 வயதாகும் கெவின் பாக்.
இந்த குட்டி நாட்டிற்கு செல்ல வீசா தேவை இல்லை என்றாலும், கடவுச்சீட்டு முக்கியம் என்கிறார் ஜனாதிபதி கெவின் பாக்.
வெறும் 1.3 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கொண்ட இந்த குட்டி நாட்டில், 11 கட்டிடங்களே அமைந்துள்ளன.

கெளுத்தி மீன், வெங்காயம் மற்றும் கீரை சாப்பிடுவது இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் புகைப்பிடிப்பதும் சட்டவிரோதம் என விசித்திரமான சட்டத்திட்டங்கள் அமுலில் இருந்தாலும், இங்குள்ள 33 குடிமக்களுக்கும் எவ்வித புகாரும் இல்லை என கூறப்படுகிறது.
ஜனாதிபதி கெவின் பாகின் உறவினர்கள் 33 பேர் மட்டுமே இங்கு குடிமக்களாக இருந்தாலும், தனியாக தேசிய வங்கி ஒன்றும், அஞ்சலம் மற்றும் சிறை கூட இங்கு செயல்படுகிறது.
மேலும் ஒரே ஒரு மதுபான விடுதியும் இங்கு செயல்பட்டு வருகிறது. இருப்பினும், போதை மருந்துக்கு மொலோசியாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1977 காலகட்டத்தில் திரைப்படம் ஒன்றை காண நேர்ந்த இளம் கெவின் பாக், அதன் மூலம் ஈர்க்கப்பட்டு 1990 காலகட்டத்தில் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் சொந்தமாக நிலத்தை வாங்கி, ஒரு தனி தேசத்திற்கான வேலைகளை துவங்கியுள்ளார்.

தற்போது தனியாக பாடல் ஒன்றும், தேசிய கொடியும் மொலோசியாவுக்கு சொந்தமாக உள்ளது.
தன்னைவிட 16 வயது இளையவரான தமது மனைவியே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என கூறும் கெவின் பாக்,
ஐக்கிய அமீரகம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து குடியுரிமை கேட்டு விண்ணப்பங்கள் வருவதாகவும், ஆனால் தமக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் நிராகரித்துள்ளதாகவும்,
இதுவரை 5,000 கோரிக்கைகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கெவின் பாக் தெரிவித்துள்ளார்.

மொலோசிய மக்கள் தமது ரத்த உறவுகள் என கூறும் கெவின் பாக், தமது மறைவுக்கு பின்னர் அவர்கள் இங்கே குடியிருக்கலாம் அல்லது மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்ப செல்லலாம் என்கிறார்.
பாரக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்பி வைப்பார் என கூறும் கெவின் பாக்,
தற்போது வெள்ளை மாளிகை தம்மை கண்டுகொள்வதில்லை என்கிறார். ஆனாலும் அவர்களுக்கு தாம் இங்கே ஆட்சியில் இருப்பது தெரியும் எனவும் கெவின் பாக் தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap