காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் சேர்ந்து செய்த செயல்.. மனமுடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். அதே பகுதியை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்மணியை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலிற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நாகலட்சுமி சரவணகுமாரிடம் பேசாமல் இருந்த நிலையில், ஆத்திரமடைந்த சரவணகுமார் தனது காதலியை அலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளான். மேலும், தன்னிடம் பேசவில்லை என்றால் பின்விளைவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளான்.

இதனால், கடுமையான மன உளைச்சலில் இருந்த நாகலட்சுமி, பயம் அதிகரித்து கடந்த 9 ஆம் தேதியன்று மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார். இதனையடுத்து இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நாகலட்சுமியின் வாக்குமூலத்தை பெற்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நாகலட்சுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சரவணகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், சரவணகுமார் அவரது நண்பர்கள் தன்னை பலமுறை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், பல்வேறு அலைபேசி எண்களில் இருந்து அழைத்து ஆபாசமான முறையில் பேசி துன்புறுத்தியதையும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக நாகலட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து தலைமறைவாகியுள்ள சரவணகுமாரையும், அவரது நண்பர்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap