கொரோனா ஆண்களை அதிகளவில் தாக்க காரணம்!..

கொரோனா வைரஸ் பெண்களை அதிகளவில் தாக்காமல் இருப்பதற்கு அவர்களது உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனே காரணம் என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 45 லட்சத்தை கடந்து உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது, இதில் 60 சதவிகிதம் பேர் ஆண்களே.

ஏன் அப்படி நடக்கிறது? ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட என்ன காரணம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடைதேடிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரிய முடிவுகள் தெரியவந்துள்ளன.
அதாவது பெண்களிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனும், X குரோமோசோமும் தான் அவர்களைக் காக்கும் வேலையை செய்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கொரொனா வைரஸ் ACE 2 புரோட்டீனை பயன்படுத்திய மனித உடலில் உள்ள செல்களை தாக்குகிறது. இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால் இயல்பாகவே அவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஐரோப்பிய இதயநோய் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு.

அத்துடன் TLR எனப்படும் ஜீன் அதாவது டால் லைக் ரிசப்டார்ஸ் என்ற ஜீன் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த TLR ஜீன் எக்ஸ் குரோமோசோமில் அதிகம் காணப்படுகிறது.

ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் உடனும் பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம் உடனும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap