நடிகர் விஜய்க்கு எத்தனை முறை திருமணம் நடந்தது? தொழிலதிபரின் மகளுடன் மலர்ந்த காதல்….! சங்கீதா மனைவியானது எப்படி?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் விஜய்.அவர் நடித்துள்ள திரைப்படங்கள் குறித்த சுவாரஸியமான தகவல்கள் நம் எல்லோருக்கும் தெரியும்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற சில சுவாரஸியமான சம்பவங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
லண்டனில் வசிக்கும் தொழிலதிபரின் மகளான சங்கீதா நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாம். மேலும் 1995 ஆம் ஆண்டு பூவே உனக்காக படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யை சங்கீதா சந்தித்து பேசியுள்ளார்.

பின்னர் ஆண்டுக்கொரு முறை சென்னை வருவது வழக்கமாம். சென்னை வரும்போதெல்லாம் விஜய் குடும்பத்தினரை சந்தித்து பேசுவது வழக்கமாகியுள்ளது.
அப்படி 1997 – 98ன் போது சங்கீதா சென்னை வரும்போது விஜய்யின் பெற்றோர்கள் அவரிடம் விஜய்யை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று கேட்க, அவர் உடனடியாக சம்மதித்திருக்கிறார்.
நடிகர் விஜய்யிடம் கேட்டபோது அவரும் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து இருவரது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது தெளிவாகிறது.

அதனைத் தொடர்ந்து இருவரது பெற்றோர் முன்னிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டின் இறுதியில் லண்டனில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு சுமார் 9 மாதம் வரை இருவரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரது திருமணம் கடந்த 1998 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ல் சென்னை ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

முதல் நாள் பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டாவது நாள் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்திருந்த 60,000 ரசிகர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர்.
அப்பொழுது ரசிகர்கள் 4 பிரிவாக திருமணத்தை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்களுக்காக 4 முறை இருவரும் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap