10 நாளில் திருமணம்!… ஒரேசேலையில் தூக்கில் தொங்கிய மணப்பெண்ணும் தோழியும்- உருகவைக்கும் காரணம்!

தமிழகத்தில் திருமணத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நாமக்கல்லின் எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி ஜோதி, இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் கணவரை பிரிந்து வாழும் ஜோதி பெரியமணலியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
அங்கிருந்து தறிப்பட்டறைக்கு வேலைக்கும் சென்று வந்தார், அங்கே வேலைக்கு வந்த பிரியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, அவருக்கு திருமணமாகவில்லை.
ஜோதியும், பிரியாவும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர், எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரியாவுக்கு வருகிற 27ம் திகதி திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது, இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்துள்ளன.

இந்நிலையில் தோழி ஜோதியை பிரிய வேண்டுமென மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் பிரியா.
இதற்கிடையே நேற்று காலை ஜோதி வீட்டுக்கு சென்ற பிரியா, ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap