அறிவியலையும் மிஞ்சிய யானை குட்டிகளின் சாதாரண செயல்! மில்லியன் பேரை சிந்திக்க வைத்த காட்சி!

”யானை தானே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்டது போல்” என்று ஒரு பழமொழி உள்ளது.
யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவது விளையாட்டிற்காக இல்லை, அதற்கு பின் பலருக்கு தெரியாத அறிவியல் உள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் ஆப்பிரிக்க யானைகள் மணல் குவியலில் படுத்து உருண்டு விளையாடும் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த யானைகள் அப்படி செய்வதற்கு காரணம் என்ன என்பதையும் பதிவிட்டுள்ளார்.

அதில்“யானைகள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போடுவதால் பூச்சி கடியிலிருந்து தப்பிக்க முடியும். யானையில் தோல்களில் மணல் துகள் இருப்பதால் வண்டு உள்ளிட்ட பூச்சிகள் அவற்றை கடிக்க முடியாது.

மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் யானைகள் இதுப் போன்று செய்கிறது“ என்று குறிப்பிட்டுள்ளார்.
மில்லியன் பேர் இந்த காட்சியை பார்த்து ரசித்துள்ளதுடன், அதற்கான பின்னணி காரணத்தினையும் தெரிந்து கொண்டுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap