கொரோனாவால் உயிரிழந்த நபரின் ரிப்போர்ட்டினை மாற்றிய மருத்துவமனை! பரபரப்பினை ஏற்படுத்திய அதிர்ச்சி!

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த 70 வயது முதியவரின் இறப்பு சான்றிதழில் அவர் இதய கோளாறால் உயிரிழந்ததாக டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கஜூரி பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர்.

இவர் ஏற்கெனவே லாரி டிரைவராக இருந்தவர். இவருக்கு கடந்த மே 2 ஆம் தேதி கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா இருந்தது உறுதியானது. இதையடுத்து அவர் அந்த மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் அவர் கடந்த மே 4 ஆம் தேதி இறந்துவிட்டார். ஆனால் அவரது இறப்புச் சான்றிதழில் இதய கோளாறு காரணமாக இறந்துவிட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்ல, கடந்த 2008-ஆம் தேதி எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதுகுறித்து இறப்புச் சான்றிதழில் மருத்துவமனை நிர்வாகம் எதுவும் அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap