
இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்து சோற்று கஞ்சியை மறந்துவிட்டனர்.
அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்… உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று.சட்டென்று
பழைய சோறு, கம்பங் களிதான்… வேற என்ன? என்று பதில் சொல்வார்.
பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையர்கள் எப்படி பழஞ் சோற்று கஞ்சியை தயாரித்து சாப்பிட்டார்கள் என்று பார்க்கலாம்.