உயிரை பறிக்கும் விஷத்தன்மை கொண்ட பச்சை இலை! நீண்ட நாள் வாழ தமிழர்கள் இதை தான் சாப்பிட்டார்களா? எவ்வளவு நன்மை தெரியுமா?

பச்சை இலையுடைய காய்கறிகள் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் இவற்றில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன.
ஆதிகாலத்தில் தமிழர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ இவ்வாறான பச்சை உணவுகளை தான் அதிகம் சாப்பிட்டார்கள்.
இன்று தமிழர் மறந்து போன ஒரு இயற்கை உணவை தான் பார்க்க போகிறோம்.

சேப்பங்கிழங்கு இலைகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சேப்பங்கிழங்கு நமது உணவில் பெரும்பாலும் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும்.
ஆனால் பல்வேறு உணவு பாரம்பரியத்தில் சேப்பங்கிழங்கு இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இலைகளை சமைக்காமல் உட்கொள்ளும் போது விஷத்தன்மை கொண்டதாக உள்ளன.
அதே நேரத்தில் சமைத்து உட்கொள்ளப்படும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

சேப்பங்கிழங்கு இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்
இந்த இலையுடைய பச்சை காய்கறி குறைவனான கலோரிகள் கொண்டது, இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
இதனால் எடை குறைப்பு திட்டம் மேற்கொள்பவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது.

சேப்பங்கிழங்கு இலைகளில் உயர்ந்த அளவு வைட்டமின் சி சத்து மற்றும் பாலிஃபீனால் கூறுகள் இருப்பதால் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
தன்னுடல் சார்ந்த நோய், புற்றுநோய், இதய கோளாறுகள் மற்றும் பல்வேறு நோய்கள் உண்டாகக் காரணமான தீங்கு விளைவிக்கும் கூறுகளுடன் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் போராடுகிறது.
ஆகவே இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த இலைகளை உட்கொள்வதால் நீங்கள் ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக வாழலாம் .

பக்க விளைவுகள்
சேப்பங்கிழங்கு இலையை சமைக்காமல் பச்சையாக உட்கொள்வதைத் தவிர வேறு எந்த பக்க விளைவும் இந்த இலைகளில் காணப்படுவதில்லை.
சமைக்கப்படாத பச்சை இலைகள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் இதனை சமைத்த பின்பு மட்டுமே உண்ண வேண்டும்.

இதில் உள்ள ஆக்சலேட் காரணமாக இந்த விஷத்தன்மை காணப்படுகிறது.
இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் மற்றும் கற்களை தோற்றுவிக்கலாம். ஆகவே இதன் முழுமையான நன்மைகளை பெறுவதற்கு இந்த இலைகளை வேக வைத்து உண்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும்.
அரை மணிநேரம் இந்த இலைகளை வேக வைப்பதால் இந்த நச்சு கூறுகள் அழிக்கப்பட்டு இலையும் மென்மையாக மாறுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap