கண் இமைக்கும் நேரத்தில் தெருவில் நின்ற நபருக்கு எமனாக வந்த சிறுத்தை! நொடியில் நடந்த அதிசயம்… நிலை குலைய வைக்கும் அதிர்ச்சி!

ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலையில் லாரி கிளினரை சிறுத்தை ஒன்று தாக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஹைதராபாத்தில் முக்கிய சாலையில் சிறுத்தை நடமாட்டம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
அதில் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருக்கிறது. டிரைவர் மற்றும் கிளினர் லாரிக்கு நின்று கொண்டிருக்க சிறுத்தை வருவது தெரிந்ததும் டிரைவர் லாரிக்குள் ஏறி விடுகிறார்.

கிளினர் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி பின் லாரிக்குள் ஏற முயற்சி செய்கிறார். திடீரென் பாய்ந்து வந்த சிறுத்தை அவரது காலை பிடிக்க, நல்வாய்ப்பாக கிளினர் அதனிடமிருந்து விடுபடுகிறார்.

அதன்பின் சிறுத்தை அருகில் இருக்கும் பூட்டிய கடை ஒன்றின் மீது ஏற முடியாமல் திணறுகிறது. அங்கிருக்கும் நாய்கள் சிறுத்தை பார்த்து துரத்த சிறுத்தை அங்கிருந்து வேறொரு இடத்திற்கு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன் இது குறித்து உரிய அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap