கெட்ட கொழுப்பை மிக விரைவாக கரைத்து எடையை குறைக்கும் இயற்கை உணவு பொருள்! இனி தினமும் சாப்பிடுங்க?

பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தான் பலாப்பழம்.
பலாப்பழத்தில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் பலாப்பழத்தை சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

இங்கு பலாப்பழத்தை சாப்பிட்டால் எப்படி உடல் எடையில் மாற்றம் தெரியும் என்று பார்ப்போம்.
பலாப்பழத்தில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. எனவே இது உடல் எடையை நிச்சயம் அதிகரிக்காது.
மேலும் இந்த பழத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உடல் எடை கூடுமோ என்ற அச்சமின்றி சாப்பிடலாம்.

அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்போர் டயட்டில் இதை சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருளை உட்கொண்டால் தான் உடல் எடை அதிகரிக்கும்.

ஆனால் பலாப்பழத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், இது உடல் எடையை அதிகரிக்காது.
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அதனை உட்கொள்ளும் போது, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது உடைக்கப்பட்டு, உடலில் கொழுப்புக்களின் அளவானது குறையும்.
மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருளை உட்கொண்டால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும். அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும்.

Share via
Copy link
Powered by Social Snap