
நமக்கு இறைவன் இரண்டு கை, கால், பார்ப்பதற்கு அழகிய கண் என்று உடல் உறுப்புகள் அழகாக கொடுத்திருக்கிறார். அதையெல்லாம் பெற்றுக்கொண்ட நாம் வாழ்க்கையில் யாரைவது குறை சொல்லி, நேரத்தை வீணடித்து, வெட்டிக்கதை பேசி பொழுதை போக்குகின்றோம்.
சாதிக்கவேண்டும் என்பதில் 100 சதவீதம் பேரில் 20 சதவீதம் பேர்தான் அதற்கான முயற்சியில் போராடுகிறார்கள். ஏன் சாதிக்க வேண்டும். எழுந்தோமா, சாப்பிட்டோமோ, தூங்கினோமோ என்பவரின் மத்தியில் உடல் உறுப்புகளை இழந்த நொடியில் மனதை தளரவிடாமல் தன்னம்பிக்கையோடு போராடி உலகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங்.
மேல் வரிசையில் பற்கள் இல்லை. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி கொண்டு நிற்க, தலை, வலது பக்கம் சாய்ந்து, கேமராவும் சென்சாரும் கண்ணாடி பொருத்தப்பட்டு கம்ப்யூட்டரில் அவரை இணைக்கப்பட்ட ஒரு வீல் சேருடன் இருப்பவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங்.
கிரகணம் என்ன, ஏலியன் யார், வேற்று கிரகவாசிகள் எங்கு வாழ்கிறார்கள் என்பது போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்தான் ஸ்டீபன்.
இவரைப் பற்றி இன்னும் பல சுவாரஸ்யங்களை பற்றி பார்ப்போம்: