உதடுகளை பெரிதாக்க பல லட்சங்களை செலவு செய்த இளம் பெண்! தீயாய் பரவும் புகைப்படம்!

உலகின் மிகப்பெரிய உதடுகளைக் கொண்ட பெண் மீண்டும் உதடுகளைப் பெரிதாக்குவதற்காக 20வது முறையாக ஊசி போட்டுக் கொண்டுள்ள தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.ஆண்ட்ரியா இவானோவா என்ற குறித்த பெண் பல்கேரியாவைச் சேர்ந்தவர்.

பெரிய உதடுகளைப் பெற வேண்டும் என்பதற்காக 2018ஆம் ஆண்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

அதற்காக பல லட்சங்களையும் ஆண்ட்ரியா செலவு செய்துள்ளார்.
இதேவேளை, சமீபத்தில் 20வது முறையாக உதடு பெரிதாக்கும் ஊசியைப் போட்டுக் கொண்ட ஆண்ட்ரியா தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap