கையில இந்த ரேகை இருந்தா கோடீஸ்வரராவீர்களாம்! இது இருந்தா புகழ் எப்பொழுதும் கிடைக்காததாம்!

நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நமது கைரேகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.நமது கையில் இருக்கும் அனைத்து ரேகைகளுக்கும், சின்னங்களுக்கும் ஏன் சின்ன சின்ன கோடுகளுக்கு கூட ஒரு அர்த்தமும், முக்கியத்துவமும் உள்ளது.
இந்த ரேகைகள் நமது எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

சூரிய ரேகை
சூரிய ரேகை என்பது அப்பல்லோ கோடு என்றும் அழைக்கப்படுகிறது. இது நமது கையின் சூரிய மேடு மற்றும் மோதிர விரலுக்கு கீழே தொடங்கி கீழ்நோக்கி நகரும். இது புகழுடன் தொடர்புடைய ரேகையாகும். இந்த ரேகை இல்லாமல் இருப்பவர்கள் புகழ் மற்றும் நற்பெயர் இல்லாமல் வாழ்வார்கள். இந்த சூழ்நிலையில் பலவீனமான விதி ரேகையும், வலிமையான சூரிய கோடும் இருந்தால் இந்த நிலை ஏற்படாது.
முக்கோணம்
உங்கள் கையில் முக்கோண சின்னம் இருந்தால் அது மகிவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். உங்கள் கைரேகையில் இருக்கும் விரிசல்கள், இடைவெளிகள், புள்ளிகள் அனைத்துமே துர்சகுனத்தின் அடையாளம்தான். அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட சூரிய ரேகைகள் ஒன்றோடொன்று நேராக பயணித்தால் அது நல்ல சகுனமாகும். அத்தனை துறைகளில் நீங்கள் வெற்றியை குவிப்பீர்கள்.
நேரான ரேகை
உங்கள் உள்ளங்கையில் உள்ள கோடுகள் பெரும்பாலும் அபாயகரமானவையாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆனால், இந்த கோடுகளில் ஒரு நேர்க்கோட்டை நீங்கள் பார்த்தால், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பீர்கள் என்று அர்த்தம்.
மேடுகள்
கையில் உள்ள மேடுகளான வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம்.
ஆமை குறி
உங்கள் உள்ளங்கையில் ஆமை வடிவக் குறி இருந்தால், அது பணக்காரர் ஆகும் வாய்ப்பு இருப்பதையும், எதிலும் வெற்றியை அடைவார் என்பதையும் குறிக்கும்.

Share via
Copy link
Powered by Social Snap