தூங்குவதற்கு முன் வாழைப்பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வாழைப்பழம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. பலவீனமான உடலைக் கொண்டவர்கள், தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டு பால் குடித்துவந்தால் போதும் உடல் வலிமை பெறும்.

வாழைப்பழத்தில் ஏரளாமான சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது. குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதிலிருக்கும் சர்க்கரை ஃப்ருக்டோஸ் வகையாகத் தான் இருக்கிறது.

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது. இவை நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. அதோடு நம்முடைய ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவிடுகிறது.

அதனால் வாழைப்பழம் சாப்பிட்டவுடன் எளிதில் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகிறது. அதனால் சோர்வாக உணரும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதுபோன்று வாழைப்பழம் பல்வேறு நன்மைகளை நமது உடலுக்கு தருகிறது. அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க.

வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது, இது உடலின் பல நோய்களை நீக்குகிறது.
வாழைப்பழத்தில் கால்சியம் உள்ளது, இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் முக்கியமானது, எனவே வாழைப்பழம் சாப்பிடுவது எலும்புகளையும் பற்களையும் வலுவாக வைத்திருக்கும்.

இரவில் சரியான தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு வாழைப்பழத்தை றிய துண்டுகளாக வெட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு சூடு தனித்து தேநீர் போல குடிக்கவும்.

இது சிறந்த தூக்கத்தைப் பெற உதவுகிறது, மேலும் நீங்கள் காலையில் எழுந்தவுடன் முற்றிலும் புதியதாக உணர உதவுகிறது, அதோடு நினைவாற்றலையும் பலப்படுத்துகிறது.
வாழைப்பழம் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து பருகுவதால் உடலுக்கு ஏராளமான புரதங்கள், வைட்டமின்கள், உணவு நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்றவை கிடைக்கிறது.

Share via
Copy link
Powered by Social Snap