நடிகர் அப்பாஸா இது? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர். 1996ம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படம் மூலம் அப்பாஸ் தமிழில் அறிமுகம் ஆனார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது ஒரு சில விளம்பர படங்களில் மாத்திரமே தலைக்காட்டி வருகிறார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழின் உச்சத்தினை தொட்ட நடிகர் தற்போது எந்த படத்திலும் நடிக்க வில்லை.

திரைப்படங்களில் இவர் நடிக்காதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இதேவேளை, அவர் சுய தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Share via
Copy link
Powered by Social Snap