இது மட்டும் இருந்த கொரோனா கிட்டயே நெருங்காதாம்.. விலை எவ்வளவு தெரியுமா?

ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்துகொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு பயந்து மக்கள் அனைவரும் மாஸ்க், கிளவுஸ் போன்றவற்றை அணிந்து வருகின்றனர். குறிப்பாக மாஸ்க் இல்லாமல் வெளியில் மக்கள் நடமாடக்கூடாது என உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றன.

இதனால், கனடா ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஹெல்மெட் ஒன்றை வடிவமைத்து இருக்கிறது. இந்த ஹெல்மெட்டில் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும், சுவாசிக்கும் காற்றை வெளியேற்றவும் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் நமது கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை நாமே தொடமுடியாத வகையில் இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயோவைஸர் 1.0 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெல்மெட் உலகளவில் பொது விற்பனைக்கு வரும்போது இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த ஹெல்மெட் மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap